நெற்றியில் குங்குமப்பொட்டு!!திருமணத்திற்கு பின் விஜே பிரியங்கா எப்படி இருக்காங்க பாருங்க..
பிரியங்கா தேஷ்பாண்டே
விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் விஜே பிரியங்கா தேஷ்பாண்டே, சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
சமீபத்தில், வசி என்பவரை திடீரென விமரிசையாக திருமணம் செய்து கொண்டார். விஜய் டிவி பிரபலங்கள் முன்னிலையில் அவர்களின் திருமணம் நடைபெற்ற நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
திருமணத்திற்கு பின்
இந்நிலையில் விஜே பிரியங்கா, ஏப்ரல் 28ஆம் தேதி 33 வயதை எட்டியுள்ளார். திருமணத்திற்கு பின் அவர் கணவர் வசியுடன் செல்ஃபி எடுத்த புகைப்படங்களும் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
மேலும், தனக்கு 33 வயதாகிவிட்டது என்று கூறி ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். திருமணத்திற்கு பின் பிரியங்கா சேலையில், நெற்றியில் குங்கும பொட்டுடன் இருப்பதை பார்த்து ரசிகர்கள் வாழ்த்துக்களையும் ஹார்ட்டின்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.