அஜித் மார்க்கெட் ஓவர்சீஸில் இவ்ளோ மோசமாக என்ன காரணம்
அஜித் தமிழ் சினிமாவில் கிங் ஆப் ஓப்பனிங் என அழைக்கப்படுபவர். ஆனால், இதெல்லாம் ஒரு காலம் என்றாகிவிட்டது. ஏனெனில் தமிழகம் தாண்டி அஜித் படங்களுக்கு எங்குமே பெரிய வரவேற்பே இல்லை.
இன்னும் சொல்ல வேண்டுமென்றால் விஜய்யின் தோல்வி படமான பீஸ்ட் ஓவர்சீஸில் 65 கோடி வசூல் செய்ய, அஜித்தின் மெகா ஹிட் ஆன குட் பேட் அக்லி ஓவர்சீஸ் வசூல் 67 கோடி தான்.

இதிலிருந்தே தெரிந்துகொள்ளுங்கள் அஜித் மார்க்கெட் எப்படியென்று, இன்னும் ஒரு ஷாக் தகவல் சொல்ல வேண்டுமென்றால் ஜனநாயகன் முதல் நாள் ஓவர்சிஸ் வசூல் 70 கோடி வரும் என கணித்துள்ளனர்.
ஆனால், வேதாளம் வரைக்கும் அஜித்தின் மார்க்கெட் ஓவர்சீஸில் கை ஓங்கியே இருந்தது, விஜய்க்கும், அஜித்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால், அஜித் அடுத்தடுத்து ஒரே இயக்குனர், ஒரே மாதிரி கதாபாத்திரம், பெரிய டெக்னிஷியன் இயக்குனர் உடன் வேலை செய்யாதது தான் ரசிகர்களிடம் இவர் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அஜித் மார்க்கெட் தமிழகம் தாண்டி அனைத்து ஏரியாவிலும் குறைய, இவரின் பிஸினஸும் குறைந்து வருகிறது, கொஞ்சம் காலத்திற்கு ஏற்றவாரு சுதாரியுங்கள் AK என்பதே எல்லொரின் முக்கியமாக அஜித் ரசிகர்களின் கோரிக்கையும்.