அவர் காதலை சொன்னார், நானும் ஓகே சொல்லிட்டேன் - அனுஷ்கா
Anushka Shetty
By Tony
அனுஷ்கா தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர ஸ்டார் என்று அழைக்கப்பட்டவர். இவர் நடிப்பில் அருந்ததி, ருத்ரமாதேவி, பாகமதி என பல ஹிட் படங்களில் சோலோ ஹீரோயினாக நடித்து மிரட்டியவர்.
இவர் சினிமாவிலிருந்து கொஞ்ச காலம் தள்ளி இருந்தார், தற்போது வருடத்திற்கு ஒரு படம் என நடித்து வருகிறார். அனுஷ்கா 40 வயது தாண்டி இன்னும் திருமணம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவரை சுற்றி காதல், திருமணம் என பல சர்ச்சைகள் சுற்றிகொண்டே தான் இருக்கும், இந்நிலையில் இவர் ஒரு பேட்டியில், நான் 6-ம் வகுப்பு படிக்கும் போது என் க்ளாஸ் பையன் என்னிடம்...ஐ லவ் யு என்றான், அந்த சமயத்தில் எனக்கு அதற்கு அர்த்தம் கூட தெரியாது.
நானும் ஓகே சொல்லிட்டேன், அந்த நிகழ்வை என்னால் இன்றும் மறக்க முடியாது, அது அவ்வளவு சந்தோஷமான நிகழ்வு என கூறியுள்ளார்.