அரியவகை நோய்க்கு பின் இப்படியொரு பிட்னஸ்!! நடிகை சமந்தா வெளியிட்ட புகைப்படம்
Samantha
Indian Actress
By Edward
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. நாக சைதன்யாவை விவாகரத்து செய்துவிட்டு படங்களில் அதிக கவனம் செலுத்தி வந்த சமந்தா மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிகப்பட்டார்.
இதனால் கடந்த பல மாதங்களாக உயிருக்கு போராடி நடக்கக்கூட முடியாமல் அவதிப்பட்டு வருகிறேன் என்று சமந்தா கூறியிருந்தார்.

இதற்காக கடினமான சிகிச்சையையும் மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டது.
சமீபத்தில் மும்பை விமான நிலையத்திற்கு சமந்தா சென்ற வீடியோ இணையத்தில் வைரலானது. ஒல்லியான முகம், நடக்கமுடியாமல் சோகத்துடன் நடக்கும் சமந்தாவை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகினர்.
தான் ஃபிட்னஸுடன் இருக்கிறேன் என்று கூறும் அளவிற்கு ஒர்க்கவுட் புகைப்படத்தை வெளியிட்டு வாய்ப்பிளக்க வைத்துள்ளார் சமந்தா.