52 வயதான நடிகை கனகா!! 36 வருடம் கழித்து யார் சந்தித்துள்ளார் தெரியுமா?
நடிகை கனகா
நடிகை தேவிகாவின் மகளான நடிகை கனகா, நடிகர் ராமராஜன் நடிப்பில் வெளியான கரக்காட்டக்காரன் படத்தில் நடித்து பிரபலமானார். முதல் படமே அவருக்கு பெரியளவில் வெற்றியை கொடுக்க முன்னணி நடிகர்களுடன் அடுத்தடுத்து நடித்து வந்தார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடித்து வந்த கனகா, மலையாளத்தில் நடித்த காட்ஃபாதர் படம் 400 நாட்களுக்கும் மேல் ஓடியது. படுபிஸியாக இருந்த கனகா, அம்மா தேவிகாவின் இறப்பிலிருந்து மீண்டு வரமுடியாமல், துயரத்தில் இருந்து வந்தார்.
36 வருடம் கழித்து
தன்னைத்தானே தனிபடுத்திக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே வராமல் இருந்த கனகாவின் சமீபத்தில் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி அதிர்ச்சியை கொடுத்தது.
ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறிய கனகா, 36 ஆண்டுகளுக்கு பின் தன்னுடைய முதல் பட ஹீரோவான ராமராஜனை சந்தித்துள்ளா. இருவரும் பல ஆண்டுகள் கழித்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு டிரண்டாகி வருகிறது.
