ஜனநாயகன் படத்தை பார்த்தால் இதுதான் நடக்கும்!! சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பேச்சு..
சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்
நடிகரும் முதலமைச்சருமான விஜய்யின் கடைசி படமாக ஜனநாயகன் நேற்று ஜூலை 23 ஆம் தேதி ரிலீயாகியுள்ளது. படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் மக்கள் கொண்டாடி வருகிறார்கள். அதிலும் தமிழ்நாட்டு அமைச்சர்களும் ஜனநாயகன் படத்தை பார்த்து எமோஷனலாகியும் வருகிறார்கள்.
இந்நிலையில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் ஜனநாயகன் படத்தை பார்த்துவிட்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.

அதில், நேற்று ஜனநாயகன் படத்தை பார்த்துவிட்டேன். பார்த்துவிட்டு வெளியே வந்ததும் முதல்வருக்கு கால் செய்து பேசினேன். நான் இப்போதுதான் பார்க்கப்போகிறேன் என்று கூறினார். அதன்பின் படத்தை பார்த்து எனக்கு கால் செய்து எப்படி இருக்கிறது என்று கேட்டார்.
ஜனநாயகன் படத்தை இந்திய மக்கள் மற்றும் உலக சினிமா ரசிகர்கள் பார்க்க வேண்டிய படம் என்று கூறினேன். இந்த படம் பலருக்கும் பாடமாக அமையும், சாதி, மதங்களை யார் பிரிக்கிறார்கள், எப்படி பிரிக்கிறார்கள் என்பது ரொம்பவும் துள்ளியமாக காட்டியுள்ளதால் படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
ஜனநாயகன் படத்தை பார்த்தால் மூளைக்கு சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் ஏற்படும் என்றும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கூறியிருக்கிறார்.