விஜய் கூட நடிக்காமல் போன காரணம் இதுதான்!! அப்படி கேட்டாரு!! நடிகை மீனா..
நடிகை மீனா
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 90ஸ் காலக்கட்டத்தில் இருந்து இப்போ வரைக்கும் தொடர்ந்து சினிமாவில் நடித்து கொண்டிருக்கிறார் நடிகை மீனா.
கண்ணழகி என்று பாராட்டப்பட்டு வரும் மீனாவின் கணவர் இறந்தப்பின் தன்னுடைய தோழிகளுடன் நேரத்தை செலவிட்டும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் வருகிறார மீனா.

ஷாஜகான் படத்தில் மட்டும் ஒரு பாடலுக்கு விஜய்யுடன் குத்தாட்டம் போட்டு நடனமாடினார் மீனா. சமீபத்தில் மீனா அளித்த பேட்டியொன்றில், நடிகர் விஜய்க்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்காமல் போன காரணத்தை பகிர்ந்துள்ளார்.
விஜய்யுடன் மட்டும் நடிக்கவே இல்லை
அதில், நான் விஜய்யுடன் மட்டும் நடிக்கவே இல்லை என்பது பற்றி எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள், ஆனால் அதற்கு முக்கிய காரணமே கால்ஷீட் பிரச்சனை தான். நான் சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த நேரத்தில் தான் எனக்கு விஜயுடனும் நடிக்க வாய்ப்பு வந்தது. அச்சமயத்தில் அஜித்துடன் கூட சில படங்களில் நடித்திருந்தேன். ஆனால் விஜய்யுடன் படவாய்ப்பு வரும் சமயத்தில் நான் வேறொரு படங்களில் பிஸியாக இருந்தேன்.
அந்நேரத்தில் எல்லாம் ஒரேநாளில் 3 ஷூட்டிங்கில் கலந்து கொண்டேன். தமிழ் மட்டுமில்லாமல் பிற மொழிகளிலும் நடித்துக்கொண்டிருந்ததால் எனக்கு விஜய் படங்கள் வாய்ப்புகளுக்கு கால்ஷீட் கொடுக்க முடியாமல் இருந்தது.

கால்ஷீட்
விஜய்யுடன் கெளசல்யா நடித்த படத்தின் வாய்ப்பு என்கிட்டதான் வந்தது. ஆனால் முடியாது என்று சொல்லிவிட்டேன். பின் பிரண்ட்ஸ் படத்தில் வாய்ப்பு வந்தது, அப்படத்தின் மலையாளத்தில் நான் தான் நடித்திருந்தேன்.
அதேபோல் தமிழிலும் நடிக்க சொன்னாங்க, 20 நாட்கள் கால்ஷீட் கேட்டதால் என்னால் கால்ஷீட் கொடுக்கமுடியாத சூழல் இருந்தது, அதனால் தான் மிஸ் பண்ணிவிட்டேன். அதன்பின், ஷாஜகான் படத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆட வாய்ப்பு வந்தபோது, நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன், ஏனென்றால் அப்போது எல்லாம் ஒரு பாடலுக்கு யாரும் டான்ஸாட மாட்டார்கள்.
அதனால் நான் முடியாதுன்னு சொன்னேன், பின் நிறைய பேரு பேசினாங்க, சவுத்ரி சார் எல்லாம் பேசினதால் தான் அந்த படத்தில் டான்ஸாட ஒத்துக்கொண்டேன். ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போனப்பின் இந்த பாட்டு வரியை கேட்டதும், எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அஜித்கூட மட்டும் மூணு
அதுபோல் விஜய் என்னிடம் பேசும்போது, நீங்க என்கூட மட்டும் நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டீங்க, அஜித்கூட மட்டும் மூணு படத்துக்கும் மே நடிச்சிருக்கீங்க என்று நேரடியாக கேட்டார்.
அதற்கு நான் கால்ஷீட் பிரச்சனை தான் சார் உங்களுக்கு தான் தெரியுமே, ஒரு படம் வரும்போது நாம் வேறொரு படத்தில் கமிட்டாகி இருந்தால் டேட் கொடுக்கமுடியாது என்பதனால் தான் முடியாம போயிடுச்சு என்று சொன்னேன், நான் அவர்கூட நடிக்கலனாலும் என் பொண்ணு அவர் கூட தெறி படத்தில் நடிச்சிட்டாங்க என்று மீனா ஓபனாக பேசியிருக்கிறார்.