முகமது ஷமியுடன் டேட்டிங் செய்கிறாரா சானியா மிர்சா!! வைரலாகும் போட்டோ..
சானியா மிர்சா
இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையாக திகழ்ந்து பல போட்டிகளை வென்று சாதித்தவர் தான் சானியா மிர்சா. இவர் கடந்த 2010ல் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 13 ஆண்டுகளுக்கு பின் ஒரு குழந்தை இருக்கும் நிலையில் இருவரும் பிரிந்தனர்.
அதன்பின் சோயிப் மாலிக், சனா ஜாவேத் என்பவரை இரண்டாம் திருமணம் செய்து ஷாக் கொடுத்தார். அவரைப்போல் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி தன் மனைவி ஹசின் ஜஹானை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
வைரலாகும் போட்டோ
இந்நிலையில் முகமது ஷமியுடன் சானியா மிர்சா டேட்டிங்கில் இருக்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால் சானியா மிர்சாவின் தந்தை அந்த தகவலை மறுத்துவிட்டார். சானியா மிர்சா, முகமது ஷமியை சந்தித்தது கூட இல்லை என்று கூறினார்.
இப்படியொரு சூழலில் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. ஆனால் முகமது ஷமியும், சானியா மிர்சாவும் கிறிஸ்துமஸ் கொண்டாடியதாகவும் கடற்கரையில் நெருக்கமாக இருப்பதாக வெளியான புகைப்படங்கள் எல்லாமே போலியானவை, ஏஐ மூலம் உருவாக்கபட்டவை என்று உறுதி செய்யப்பட்டுள்ளனர்.