2025-ன் முதல் ஜோடி!! குழந்தை பருவ காதலருடன் திடீர் கல்யாணத்தை முடித்த சாக்ஷி அகர்வால்..
Marriage
Sakshi Agarwal
Tamil Actress
Actress
By Edward
சாக்ஷி அகர்வால்
மாடலிங் துறையில் இருந்து சினிமாவில் வாய்ப்பு கிடைத்து பிரபலமானவர்களில் ஒருவர் நடிகை சாக்ஷி அகர்வால். ராஜா ராணி படத்தில் சிறு ரோலில் நடித்த சாக்ஷி பல படங்களில் சிறுசிறு ரோலில் நடித்து வந்தார்.
காலா, விஸ்வாசம், அரண்மனை 3, பகீரா உள்ளிட்ட படங்களில் நடித்த சாக்ஷி பிக்பாஸ் 3 சீசனில் போட்டியிட்டு 49 நாட்களில் வெளியேறினார். தற்போது கெஸ்ட் சாப்டர் 2, தி நைட் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் ஒரு தமிழ் பையனுடன் டேட்டிங் சென்றது நன்றாக இருந்ததாகவும் சக நடிகருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததில்லை என்றும் கூறியிருந்தார்.
தற்போது தன்னுடைய குழந்தைப்பருவ காதலருடன் திருமணத்தை முடித்திருக்கிறார் நடிகை சாக்ஷி அகர்வால்.