என் காமெடியை கெடுத்துவிட்டான் கருப்பன்!! விஜயகாந்தை நக்கலடித்த கவுண்டமணி..

Vijayakanth Goundamani Gossip Today Senthil
By Edward Jan 03, 2025 12:39 PM GMT
Report

கவுண்டமணி

தமிழ் சினிமா இதுவரை எத்தனையோ காமெடி நடிகர்களை கடந்து வந்துள்ளது. ஆனால், அவர்கள் எல்லோரையும் விட என்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பவர் கவுண்டமணி அவர்கள் தான்.

ஏனெனில் எந்த ஒரு படத்திலும் ஹீரோக்கு கூஜா தூக்குவது போல் இவர் நடிக்க மாட்டார், அது ரஜினியாக இருந்தாலும் சரி, கமலாக இருந்தாலும் சரி கலாய்த்து எடுத்துவிடுவார்.

என் காமெடியை கெடுத்துவிட்டான் கருப்பன்!! விஜயகாந்தை நக்கலடித்த கவுண்டமணி.. | Countemani Highlighted Actor Vijayakanth

சேதுபதி ஐபிஎஸ்

அப்படி சேதுபதி ஐபிஎஸ் படத்தில் செந்தில், கவுண்டமணி காமினேஷனில் காமெடி காட்சிகள் மிகப்பெரியளவில் நடந்தது. இவரும் செந்திலும் செய்த கலாட்டா இன்றும் மறக்கமுடியாத அளவிற்கும் கப்பல் நடுவுல நின்னுட்டா நீங்க தண்ணிக்குள்ள இறங்கி தள்ளனும், அதுக்குத்தான் 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்ற காட்சிகள் பலரையும் சிரிக்க வைத்தது.

என் காமெடியை கெடுத்துவிட்டான் கருப்பன்!! விஜயகாந்தை நக்கலடித்த கவுண்டமணி.. | Countemani Highlighted Actor Vijayakanth

அப்போது அந்த படத்தின் நகைச்சுவை ஹிட் ஆனது குறித்து பத்திரிக்கையாளர் ஒருவர் கவுண்டமணியிடம் கேட்டபோது, நல்லாத்தான் இருந்துச்சு, ஆனா அந்த கருப்பன் கெடுத்துட்டான், கேப்டன் விஜயகாந்தின் அபார நடிப்பி தனது காமெடியை மிஞ்சிட்டதாகவும் தன்னுடைய நக்கல் பாணியில் கூறியிருக்கிறார் கவுண்டமணி.