எனக்கு நயன்தாரா வேணும்..கொச்சையாக பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்..
சிவி சண்முகம்
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம், தொகுதி பங்கீடு சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் அனைத்து கட்சியிலும் தொடங்கியுள்ளது. இதன்காரணமாக தமிழ்நாட்டு அரசியல் களம் தற்போதில் இருந்தே சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் கூட்டணி கட்சிகளுடன் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் பழக்கவழக்கம் உள்ளிட்டவற்றை கண்டித்து அதிமுகவினர் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகிறார்கள். போராட்டத்தில் பங்கேற்று பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் சிவி சண்முகம் பேசியுள்ளது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
எனக்கு நயன்தாரா வேணும்
அதில், அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்று கூறினார், ஆனால் முதல்வர் ஒருபடி மேலே சென்று உங்கள் கனவை சொல்லுங்கள், நிறைவேற்றுகிறோம் என்று கூறுகிறார்.

ஆமா, எனக்கு நயன்தாரா வேணும், கனவை நிறைவேத்துவாரா? நயன் தாராவை திருமணம் செய்து வைக்கச்சொல்லி கேட்பார்கள், இவர் நிறைவேற்றி வைப்பாரா? என சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஒரு நடிகையை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அவர் பேசியதை பலரும் அதிர்ச்சி அடைந்து கண்டித்து வருகிறார்கள்.