விளையாட்டிலும் மூட நம்பிக்கையா? இந்திய கால்பந்து அணிக்கு 16 லட்ச சம்பளத்தில் ஜோதிடர்

Football Astrology
1 வாரம் முன்
Edward

Edward

சமீபத்தில் நடந்து முடிந்த ஏ.எஃப்.சி ஆசியக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில் இந்திய அணியினர் சிறப்பாக ஆடி தகுதி பெற்றுள்ளது. இதற்கு முழு காரனம் ஜோதிடர்களின் உத்வேகமூட்டல் தானாம். இனிமேல் பயிற்சி எல்லாம் உதவாது என்று இந்திய கால்பந்து கூட்டமைப்பு ஒரு முடிவை எடுத்துள்ளது.

இதற்காக இந்திய கால்பந்து அணியின் ஜாதகத்தை ஜோதிட நிறுவனம் ஒன்றிற்று 16 லட்ச சம்பளத்திற்கு நியமித்திருக்கிறார்கள். இந்த செய்தி தற்போது கேலிக்கூத்தாக மாறியுள்ளது.

இந்திய கால்பந்து கூட்டமைப்பில் பல ஊழல்கள் நடைபெற்று வருவதால் அதை மூடிமறைக்க இதுபோன்ற செயல்கள் செய்யப்பட்டதாகவும், இந்தியக் கால்பந்தில் ஜோசியம் புதிதல்ல, ஒருமுறை டெல்லியில் உள்ள கால்பந்து கிளப் பாபா என்பவரை நியமித்தது.

போட்டியை வென்ற பிறகு அவரால் தான் வென்றதாக பெருமைப்பட்டுக் கொண்டதும் நடந்திருக்கிறது. விளையாட்டிலும் மூடநம்பிக்கையை தற்போது இழுத்துள்ளார்களே என்றும் வீரர்களுக்கு ஜோசியம் பார்ப்பீர்களா? என்று இணையத்தில் கிண்டல் செய்து வருகிறார்கள்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.