எந்த நடிகர் மீதும் காதல் வரல..பேர்லதான் சங்கீதம்!! நடிகை சங்கீதா ஓபன் டாக்
சங்கீதா
தென்னிந்திய சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை சங்கீதா. தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமான சங்கீதா, கடந்த 3 ஆண்டுகளில் 3 படங்கள் மட்டுமே நடித்திருந்தார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வந்த சங்கீதா பாடகர் கிரிஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், நான் சினிமாவில் இத்தனை வருடங்களாக இருந்து இருக்கிறேன். ஆனால் எந்த நடிகர் மீதும் எனக்கு காதல் வரவில்லை.

ஆனால் கிரிஷ் மீது ஏன் வந்தது என்றால், எனக்கு பாடவே சுத்தமா வராது. எனக்கு பேர்ல மட்டும் தான் சங்கீதம் இருக்கும், ஆனால் எனக்கு சங்கீதமே வராது.
அதனால் பாடுறவர்கள் மீது எனக்கு பயங்கர மரியாதை இருந்தது. அந்த மரியாதையால் தான் கிரிஷ் இன்று என் கணவராக இருக்கிறார் என்று சங்கீதா கூறியிருக்கிறார்.