ஐஸ்வர்யா ராஜேஷால் பிரபல நடிகரின் வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டதா? உண்மையை உடைத்த பயில்வான்..
தமிழ் சினிமாவில் ஆரம்பகாலகட்டத்தில் சிறு கதாபாத்திரம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி தற்போது மக்கள் செல்வன் என்ற பெயரை பெற்று வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல போன்ற படங்களில் நடித்து, பின் பிட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த கானோம், சூது கவ்வும், இதற்கு தானே ஆசைபட்டாய் பால குமாரா போன்ற வெற்றி படங்களால் பிரபலமானார்.
இதையடுத்து ஒரு வருடத்தில் 6 படங்களை வெளியிட்டு பல வெற்றிகளை கொடுத்து வருகிறார். இந்த வருடத்தின் ஆரம்பமுதலே சுமார் 12 படங்களை நடித்தும் பல படங்களில் கமிட்டாகியும் படப்பிடிப்பில் இருந்து வருகிறார். இப்படியிருக்க சினிமாவில் நடிக்க ஆரம்பித்த நேரத்தில் திருமணமாகி இரு குழந்தைகளை பெற்றெடுத்தார். சர்ச்சையில் சிக்காத விஜய் சேதுபதி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுடன் தொடர்ந்து ஜோடி போட்டு நடித்து வருவது கேள்விக்குறியாக இருந்தது. இதுபற்றி நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் கூறியது,
விஜய் சேதுபதி ஐஸ்வர்யா ராஜேஷுடன் தொடர்ந்து படத்தில் நடிப்பதால் நடிகைக்கு அவர் மேல் காதல் ஏற்பட்டதாகவும் அது மனைவிக்கு தெரிய விவாகரத்து வரை சென்றதாகவும் கூறியுள்ளார். ஆனால் குடும்பத்தினர் சமாதானப்படுத்திய பின் அமைதியானாராம். அதிலிருந்து விஜய் சேதுபதி இனி ஐஸ்வர்யா ராகேஷுடன் நடிக்க மாட்டார் என்ற உறுதியில் இருக்கிறாராம்.