மகள் ஆராத்யா மூலம் கணவருடன் விவாகரத்துக்கு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய்.. வைரலாகும் வீடியோ..

Aishwarya Rai Divorce Amitabh Bachchan Abhishek Bachchan
By Edward Dec 16, 2023 06:25 AM GMT
Report

இந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து நடிகர் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்தார் நடிகை ஐஸ்வர்யா ராய். திருமணத்திற்கு பின் நடிப்பில் இருந்து சற்று விலகி குடும்பத்தை பார்த்து வந்த ஐஸ்வர்யா ராய், ஆராத்யா பச்சன் என்ற மகளை பெற்றெடுத்து வளர்த்து வந்தார்.

சமீபத்தில் நடிகர் அபிஷேக் பச்சன் வெளியிட்ட புகைப்படத்தில் அவர் கையில் திருமணம் மோதிரம் இல்லை. இதனால் நெட்டிசன்கள், ஐஸ்வர்யா ராய்யை விவாகரத்து செய்துவிட்டாரா? என்று கேள்வி எழுப்பி வந்தார்கள்.

மகள் ஆராத்யா மூலம் கணவருடன் விவாகரத்துக்கு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய்.. வைரலாகும் வீடியோ.. | Aishwarya Abhishek Divorce Rumours Come Together

அமிதாப் பச்சன் இன்ஸ்டாகிராமில் மருமகள் ஐஸ்வர்யா ராயை அன்ஃபாலோ செய்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் அமிதாப் பச்சன் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட புகைப்படத்தில், "எல்லாமே சொல்லியாச்சு, எல்லாமே நடந்துடுச்சு" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு நிகழ்வு அபிதாப் குடும்பத்தில் நடந்துள்ளது. ஐஸ்வர்யா - அபிஷேக் மகளான ஆராத்யா பள்ளியில் ஸ்பாட் லைட் நிகழ்ச்சியில் நடித்திருக்கிறார். அந்நிகழ்ச்சிக்கு அமிதாப் பச்சன் குடும்பமே சென்றுள்ளது. அவர்களுடன் நடிகை ஐஸ்வர்யா ராயும் சென்றிருக்கிறார்.

இதன்மூலம் ஐஸ்வர்யா ராய் கணவர் அபிஷேக்கை விவாகரத்து செய்திருக்கிறார் என்பதற்கு முற்றுப்புள்ளி வைத்ததாக கூறப்பட்டு வருகிறது. ஆராத்யா நடித்த வீடியோவும் ஐஸ்வர்யா ராய் கணவருடன் மகளின் நிகழ்ச்சியை பார்த்து மகிழ்ச்சியடைந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

GalleryGallery