அனிரூத் இப்படியாக எனக்கு சமந்தமே இல்லை தனுஷ் தான் காரணம்!! ரஜினிகாந்த் மகள் கூறிய உண்மை..
ஐஸ்வர்யா - தனுஷ் இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். என்னதான் பிரிந்து வாழ்ந்து வந்தாலும், தங்களுடைய பிள்ளைகளை அக்கறையோடு இருவருமே கவனித்து கொள்கிறார்கள். அதை நாம் தொடர்ந்து பல இடங்களில் பார்த்து வருகிறாராம்.
சமீபத்தில் ஐஸ்வர்யா பேட்டி ஒன்றில் கலந்துகொண்டிருந்தனர். அப்போது பல விஷயங்கள் குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதில் ஒன்றாக "நீங்கள் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் அனிருத், இன்று இந்தியளவில் புகழின் உச்சத்தில் இருக்கிறார்" என கேள்வி தொகுப்பாளர் கேட்டார்.
இதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் "அதற்கு தனுஷ் தான் காரணம், நான் இல்லை. அனிருத் இடம் இருக்கும் திறமையை தனுஷ் தான் கண்டுபிடித்தார். அனிருத்தின் பெற்றோர்கள் அவரை படிக்க வெளிநாட்டிற்கு செல்ல நினைத்தபோது, அவர்களின்டம் பேசி மனம் மாற்றினார்".
"அனிருத்திற்கு கீபோர்டு வாங்கி கொடுத்தார். அதன்பின் 3 படத்தில் அனிருத்தை இசையமைப்பாளராக போடவேண்டும் என என்னிடம் கூறினார். இன்று அனிருத்தின் வளர்ச்சியை பார்க்கும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என கூறினார் ஐஸ்வர்யா.