தனுஷை பிரிந்து ஒரு வருடமாகப்போகுதா!! முதல் முறையாக தனியாக பொங்கல் கொண்டாடும் ஐஸ்வர்யா
தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக வளர்ந்து பாலிவுட், ஹாலிவுட் வரை சென்ற நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். தற்போது வாத்தி, கேப்டன் மில்லர் உட்பட பல படங்களில் கமிட்டாகி 2025 வரையிம் கால்ஷீட்டை மிஸியாக வைத்து வருகிறார்.
இந்நிலையில் தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை கடந்த ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி இருவரும் பிரிவதாக கூறி அறிக்கை வெளியிட்டு ஷாக் கொடுத்தனர்.
இதன்பின் தனுஷ் படங்களில் பிஸியாக நடித்தும் ஐஸ்வர்யா தான் இயக்கும் படத்தின் வேலைகளிலும் பிஸியாக இருந்து வருகிறார்கள். கிடைக்கும் நேரத்தில் ஒர்க்கவுட், போட்டோஷூட் என்று இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது தனுஷ் - ஐஸ்வர்யா பிரிந்து 17 ஆம் தேதியோடு ஒரு வருடம் ஆகப்போகும் நிலையில் 18 ஆண்டுகளுக்கு பின் இருவரும் தனியாக பொங்கல் கொண்டாடவுள்ளனர்.
ஐஸ்வர்யா பொங்கலுக்கு தயாராகி இருக்கிறேன் என்ற பதிவிற்கு ரசிகர்கள் D-யுடன் எப்போது சேர்ந்து புகைப்படம் போடப்போகிறீர்கள் என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.