ரகசிய காதலை லீக் செய்த பொன்னியின் செல்வன் பூங்குழலி!! விஜய் பட நடிகர் கொடுத்த அழுத்தம்...
தமிழ் சினிமாவில் மலையாள நடிகைகளின் வருகையில் இணைந்தவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா லட்சுமி, நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார்.
அதன்பின் கார்கி, கேப்டன் போன்ற படங்களில் நடித்தார். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வந்தார்.
அதன்பின் கட்டா குஸ்தி படத்தில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி இணையத்தில் அக்டிவாக இருந்து புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். இந்நிலையில் கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களில் நடித்த நடிகை அர்ஜுன் தாஸ்-உடன் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதனால் இருவரும் காதலில் இருப்பதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால், நாங்கள் சந்தித்த போது எடுத்தது. இது இவ்வளவு பெரியதாகும் என்று எதிர்ப்பார்க்கவில்லை.
நாங்கள் இருவரும் நண்பர்கள் தான். அர்ஜுன் தாஸ் ரசிகர்களுக்கு “ அவர் உங்களுடையவர் என்று ஒரு பதிவினை போட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.