என் மார்பு பகுதி குறித்து ஏன் இவ்வளவு விவாதம்!! காலாச்சாரம் என்றால் அதுதானா? நடிகை ஐஸ்வர்யா லட்சுமி..
ஐஸ்வர்யா லட்சுமி
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, சமீபத்தில் வைர நகைக் கண்காட்சிக்கு கிளாமர் உடையில் சென்றதை பலரும் விமர்சித்தனர். இதுகுறித்து ஐஸ்வர்யா லட்சுமி காட்டமான பதிலை கொடுத்துள்ளார்.

அதில், அந்த நிகழ்ச்சியில் தனக்கு ஏற்பட்ட அசெளகரியத்திற்கு காரணம் தன்னுடைய ஆடை அல்ல. புகைப்படக் கலைஞர்கள் தன்னை புகைப்படம் எடுத்த விதம்தான். அவர்கள் என்னுடைய முகத்ஹ்டை மையமாக வைத்து புகைப்படம் எடுக்கவில்லை. மாறாக, வித்தியாசமான கோணங்களில் இருந்து புகைப்படம் எடுத்தனர்.
அதனால் எனக்கு அசெளகரியமாக இருந்தது. நாம் அசெளகரியமாக உணரும்போது, நம்முடைய உடல் மொழியிலும் அது வெளிப்படும். அப்போது என்னுடைய தனிப்பட்ட எல்லைகள் மீறப்பட்டதாக உணர்ந்தேன்.
பெண்ணின் மார்புப் பகுதி
அந்நிகழ்ச்சிக்குப்பின் சோசியல் மீடியாவில் வெளியான விமர்சனத்தை பார்த்தேன். கலாச்சாரம் என்பது ஒரு பெண்ணின் மார்புப் பகுதியிலோ, அவர் அணிந்திருக்கும் ஆடையின் நீளத்திலோ மட்டும் இருக்கிறதா?

நாம் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதிலும் கலாச்சாரம் இருக்கிறது அல்லவா? பெண்களைப் பற்றி தகாத கருத்துகளை தெரிவிப்பவர்கள் மீது அதிகளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதில்லை. ஆனால் பெண்கள் தங்களது உடை, உடலமைப்பு, ஆடையின் வடிவம் குறித்து எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக ஆரம்பத்தில் வெளியான ட்ரோல்களை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ட்ரோலிங் ஆரம்பித்து 24 மணி நேரம் நான் அதை சிரித்துக் கொண்டே கடந்து சென்றேன், ஆனால், நாட்கள் செல்லச்செல்ல இந்த விவகாரம் குறித்து இவ்வளவு பெரியளவில் விவாதம் நடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.

நம் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்தோ, வயதான பெற்றோர்கள் எத்தனை பேர் கைவிடப்படுகிறார்கள் என்பது குறித்தோ ஏன் விவாதிக்க முடியவில்லை, என் மார்பு பகுதி குறித்து ஏன் இவ்வளவு விவாதம் நடக்க வேண்டும் என்று கடுமையான கேள்விகளை முன் வைத்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.