திருமணமாகி குழந்தை இருக்கும் நடிகையை தட்டித்தூக்கிய அஜித்!! அமைதியா வேலை பார்க்கும் இயக்குனர்..
Ajith Kumar
Aishwarya Rai
Vignesh Shivan
By Edward
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித் நடிப்பில் துணிவு படம் பொங்கல் அன்று மக்களை திருப்திப்படுத்தி வருகிறது.
இப்படத்தை அடுத்து அஜித் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அப்படத்தின் அப்டேட்டாக நடிகை நயன் தாரா, திரிஷா உள்ளிட்டவர்கள் நடிக்கவுள்ளார்கள் என்ற செய்தி வெளியாகி வந்தது.
இந்நிலையில் இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளார் என்ற செய்தி இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.
சமீபத்தில் மாலை போட்டுவிட்டு சபரிமலைக்கு சென்ற விக்னேஷ் சிவன் கூடிய விரைவில் அப்டேட் வரும் என்று கூறியிருந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராயின் சினிமா வாழ்க்கையில் முதன்முறையாக நடிகர் அஜித்துடன் ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளார்.