48 வயதில் இப்படியா? நடிகை ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்ட இரவு பார்ட்டி புகைப்படம்..
உலக அழகியாக இருந்து இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக கொடிக்கட்டி பறந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராய். பாலிவுட்டில் இருந்து கோலிவுட் வரை நடித்த ஐஸ்வர்யா அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகினார்.
ஆரத்யா என்ற மகளை பெற்று உடல் எடையை ஏற்றி ஆளே அடையாளம் தெரியாமல் மாறி இருந்தார். தற்போது மீண்டும் தன் மார்க்கெட்டினை தொடர ரஜினிகாந்தின் 169 வது படத்தில் நடிக்க கமிட்டாகி இருப்பதாக செய்திகள் வந்தன.
சமீபத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவில் பிரம்மிக்க வைக்கும் படி ரெட் கார்ப்ரேட்டில் நடந்து மக்களை ஈர்த்தார். தற்போது சமீபத்தில் நடந்த கரண் ஜோகர் பிறந்த நாள் பார்ட்டியில் தன் கணவருடன் இணைந்துச் கலந்து கொண்டார்.
பார்ட்டியில் உள்ளே நடந்த மது பார்ட்டியின் வீடியோக்கள் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து வருகிறது. அப்போது ஐஸ்வர்யா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 48 வயது ஐஸ்வர்யா ராய்-ஆ இது என்று ரசிகர்கள் வாய்ப்பிளந்து பார்த்து வருகிறார்கள்.