மாசிவ் குதிரைன்னு சொன்னது தப்பா!! ஜெயம் ரவியால் விழுந்து விழுந்து சிரித்த ஐஸ்வர்யா ராய்

Jayam Ravi Karthi Aishwarya Rai Trisha Ponniyin Selvan 2
By Edward Apr 27, 2023 11:13 AM GMT
Report

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் 2 பாகம் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் இயக்குனர் மணிரத்னம் உடன் விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா போன்ற நட்சத்திரங்கள் பல பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்கள்.

தற்போது மும்பையில் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் பாலிவுட் மீடியாக்களுக்கு பேட்டிக்கொடுத்தும் வருகிறார்கள்.

அந்தவகையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் ஜெயம் ரவி, கார்த்தி பெரிய குதிரையில் ரைட் செய்தார் என்று கூறியுள்ளார்.

மாசிவ் ஹார்ஸ் என்று அவர் கூறியதும் பக்கத்தில் இருந்து நடிகை ஐஸ்வர்யா ராய் விடாமல் விழுந்து விழுந்து சிரித்திருக்கிறார்.

இரட்டை அர்த்தத்தில் புரிந்து கொண்ட ஐஸ்வர்யா ராய் எதற்கு சிரிக்கிறார் என்ற குழப்பத்தில் புலம்பி இருக்கிறார் ஜெயம் ரவி. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.