இவ வேண்டாம்னு கோவத்தில் கத்திய இயக்குனர்!! மேடையில் போட்டுடைத்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். காக்கா முட்டை, வடசென்னை உள்ளிட்ட சூப்பர் ஹிட் படத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பு பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷ் வரிசையாக பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

அந்தவகையில் டிரைவர் ஜமுனா, ரன் பேபி ரன், தி கிரேட் இந்தியன் கிச்சன் போன்ற படங்கள் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியாகியது.
ஆனால் சொல்லிக்கொள்ளும் படியாக அப்படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் படுதோல்வியை சந்தித்திருந்தது.
தற்போது சொப்பன சுந்தரி என்ற படத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், சமீபத்தில் அப்படத்தில் டிரைலர் மற்றும் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
அப்போது அப்படத்தின் இயக்குனருடன் மேடையில் பேசியுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் தான் படத்தில் எப்படி கமிட்டாகினேன் என்பதை கூறியிருந்தார்.

அப்படத்தின் இயக்குனர் சார்ல்ஸ், என்னை வைத்து படம் பண்ண மாட்டேன் என்று கூறியிருந்தார் என்று என் மேனேஜர் என்னிடம் கூறினார். யார் வெச்சு பண்ணுவேன் என்னை வைத்து மட்டும் பண்ண மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.
ஏன் என்று மேடையில் ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குனரிடம் கேட்டுள்ளார். அதற்கு இயக்குனர், சண்டை ஏன் உருவாகியது என்பது வேண்டாம் அது மோசமாக இருக்கும்.
அப்படி தேவையே இல்லை என்று அவரின் மேனேஜரிடம் கூறிவிட்டு, ஐஸ்வர்யா ராஜேஷிடம் கோபப்பட்டு வந்தேன். அதன்பின் அவங்க தான் என் மீது கோபப்பட்டார் என்று இயக்குனர் சார்ல்ஸ் தெரிவித்துள்ளார்.