வெளிநாட்டில் இப்படியொரு போஸ்!! ரம்பாவுக்கே டஃப் கொடுக்கும் கிளாமரில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..
சினிமா வாய்ப்புகள் பெரும்பாலும் சிபாரிசு அல்லது வாரிசுகளாக இருந்தால் மட்டுமே சீக்கிரமாக வாய்ப்பு பெற்று உச்சத்தை அடையமுடியும். அப்படி எந்த வாய்ப்பும் இல்லாமல் தன் உழைப்பால் உயர்ந்து ஒரு நல்ல இடத்தினை பிடித்தவர்களின் இடத்தினை பிடித்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
ஆரம்பத்தில் நீயெல்லாம் ஒரு நடிகையாக முடியாது என்று பலர் ஒதுக்கினார்கள் என்று கூறியிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அப்படி தன் வாழ்க்கையை புரட்டி போட்ட படம் அட்டக்கத்தி. பா ரஞ்சித் அறிமுகப்படுத்தி, அதன்பின் சிறு ரோல்களில் விஜய் சேதுபதி சிபாரிசு கிடைத்து வளர்ந்தார்.
அதன்பின் காக்கா முட்டை என்ற படம் அவரின் கேரியரை அப்படியே மாற்றியமைத்து உச்சத்தை தொட காரணமாக அமைந்தது. இதன்பின் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி தனக்கான ஒரு இடத்தினை பிடித்து வருகிறார்.
இதுவரை குடும்ப பாங்கான நடிகையாக நடித்து போட்டோஷூட் எடுத்தும் வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது கிளாமர் ரூட்டுக்கு திரும்பியுள்ளார். அடுத்தடுத்த குடும்ப குத்து விளக்கு ரோலில் நடித்திருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் கிளாமர் ஆடையணிந்து போட்டோஷூட் எடுத்து வருகிறார்.
தற்போது வெளிநாட்டில் இருந்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் குட்டையாடையணிந்து ரம்பாவுக்கே டஃப் கொடுக்கும் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.