டாப் நடிகருக்கு கன்னத்தில் வேகமாக பளார்..வலிக்குதான்னு கேட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்..
ஐஸ்வர்யா ராஜேஷ்
காக்கா முட்டை என்ற படத்தில் இரு குழந்தைகளுக்கு தயாக நடித்து மிகப்பெரிய ஆதரவை பெற்று, தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார் நடிகர் ஐஸ்வர்யா ராஜேஷ்.
தமிழை தாண்டி தற்போது தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், வெங்கடேஷ் டகுபடி நடிப்பில் உருவாகியுள்ள சங்கராந்திகி வஸ்துனம் என்ற படத்தில் நடித்துள்ளார். மீனாட்சி செளத்ரியும் நடித்துள்ள இப்படத்தில் வெங்கடேஷுக்கு மனைவியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.
படம் பொங்கல் ஸ்பெஷலாக இன்று ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் பிரமோஷனுக்காக பேட்டியளித்து வந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
நடிகருக்கு கன்னத்தில் பளார்
அதில் படத்தில் வெங்கடேஷை அறையும் படியான காட்சி இருக்கிறது. முதலில் அவரை நான் மெதுவாகத்தான் அடித்தேன், அடிக்கும்போது வலிக்கவில்லையா? என்று அவரிடம் கேட்டேன்.
அதற்கு அவரோ வலிக்கவில்லை இன்னும் வேகமாக அடி என்று வெங்கடேஷ் கூறினார். அதன்பின் அவரது கன்னத்தில் பலமாக அறைந்தேன் என்று ஓப்பனாக பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.