தனுஷ் இல்லாமல் ஐபிஎல் போட்டி பார்த்த மகன்கள்!! ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட புகைப்படம்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளாக நடிகர் தனுஷை 2004ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். கடந்த் 18 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த ஐஸ்வர்யா - தனுஷு, யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்களை பெற்று வளர்த்து வந்தனர்.
கடந்த 2022ல் இருவரும் தனித்தனியாக பிரியவுள்ளதாக அறிக்கை வெளியிட்டு ஷாக் கொடுத்தனர். கணவரை பிரிந்ததும் தன்னுடைய இரு மகன்களுடன் வாழ்ந்து வந்த ஐஸ்வர்யா, இயக்கத்தில் கவனம் செலுத்தினார்.
தற்போது தன் அப்பா ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் லால் சலாம் படத்தினை இயக்கி வருகிறார் ஐஸ்வர்யா.
அப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி நெட்டிசன்களால் கலாய்த்து வந்த நிலையில் ரஜினிகாந்த், கபில் தேவுடன் தன்னுடைய புதிய லுக்கில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் ஐஸ்வர்யா.
தற்போது தன் இரு மகன்களுடன் நேற்று நடந்த சென்னை - குஜராத் போட்டியை சேப்பாக் ஸ்டேடியத்தில் பார்த்து ரசித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்படத்தை பார்த்த ரசிகர்கள் எதிர்மறையான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.