மருத்துவமனையில் அட்மிட் ஆன ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! விவாகரத்தை தொடர்ந்து ஐஸ்வர்யா சொன்ன அதிர்ச்சி செய்தி
COVID
Corona
Aishwarya Dhanush
By Parthiban.A
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா சில வாரங்களுக்கு முன்பு தான் நடிகர் தனுஷை பிரிந்தார். அவர்கள் விவாகரத்து விஷயம் இந்திய அளவில் பேசுபொருள் ஆனது. அவர்களுக்கு நடுவில் என்ன தான் பிரச்சனை என பல்வேறு செய்திகள் உலா வந்தன. இருப்பினும் அவர்கள் பிரிந்ததற்கான காரணத்தை இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்கிறார். ஹாஸ்பிடலில் கையில் ஊசி உடன் இருக்கும் போட்டோவை அவர் வெளியிட்டு இருக்கிறார். விவாகரத்தை தொடர்ந்து இப்படி ஒரு அதிர்ச்சி கொடுக்கிறாரே என அனைவரும் ஷாக் ஆகி இருக்கின்றனர்.
இன்னும் 2022ல் என்னவெல்லாம் சந்திக்க வேண்டுமோ.. பார்க்க தயார் என ஐஸ்வர்யா பதிவிட்டு உள்ளார்.