ஒன்னும் குறைஞ்ச மாதிரி தெரியலையே! ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் உடற்பயிற்சி வீடியோவை ஓட்டும் ரசிகர்கள்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக நடிகர் தனுஷை 2004ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். திருமணத்திற்கு பிறகு அவர் இயக்கத்தில் கணவர் தனுஷை வைத்து 3 படத்தினை இயக்கினார்.
படம் சூப்பர் ஹிட் அடித்தது. பின் இரு குழந்தைகளுக்கு தாயானப்பின் குடும்பத்தினை பார்த்துக் கொண்டு வந்தார் ஐஸ்வர்யா. சந்தோஷமாக போன வாழ்க்கையில் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட தனுஷை விவாகரத்து செய்ய முடிவெடுத்து அறிக்கையை வெளியிட்டார்.
இதற்கான காரணத்தை கண்டுப்பிடித்த ரஜினிகாந்த் இருவரையும் சமாதானம் செய்ய முயற்சித்தும் வீணாகியது. யார் பேச்சையும் கேட்காமல் தனுஷ் படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
பின் ஐஸ்வர்யா இதுவரை இல்லாத அளவிற்கு சுதந்திர பறவையாக மாறியுள்ளார். மகன்களுடன் நேரத்தினை செலவிட்டும் உடற்பயிற்சி, சைக்கிளிங் போன்றவற்றை செய்து அதை அப்படியே இணையத்திலும் பதிவிட்டு வருகிறார்.
இதனை பார்த்து பலர் இதற்கு தான் தனுஷை விவாகரத்து செய்தீர்களா என்ற விமர்சனமும் எழுந்தது. தற்போது காலையில் 40 கிலோ ஓடிய பிறகு இப்படியான உடற்பயிற்சி என பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அப்படி ஒன்னும் குறைஞ்ச மாதிரி இல்லையே என்று கருத்தினை தெரிவித்துள்ளார்.
