தனுஷை பிரிந்த பின்னும் மச்சினர் செல்வராகவனை விட்டுவிடாத ரஜினிகாந்த் மகள்!! உண்மையான காரணம் இதான்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளாக நடிகர் தனுஷை 2004ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். 18 ஆண்டுகள் தனுஷுடன் வாழ்ந்து யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்களை பெற்று வளர்ந்து வந்தனர்.
சிறப்பாக 18 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் இருவரும் பிரிந்து வாழ்வதாக கூறி 2022 ஜனவரி 17 ஆம் தேதி அறிக்கை வெளியிட்டு ஷாக் கொடுத்தனர்.

இரு வீட்டாரும் பிரச்சனை சரி செய்ய கேட்டும் இருவரும் கேட்காமல் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
தனுஷை பிரிந்தது முதல் ஐஸ்வர்யா சுதந்திர பறவையாக இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்தார். சமீபத்தில் தனுஷின் அண்ணனும் இயக்குனருமான செல்வராகவன் பிறந்தநாள் அன்று அவருடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அப்புகைப்படத்தை பார்த்த பலர் இன்னும் செல்வராகவனுடன் பேசி வருகிறாரா என்று ஷாக்கான ரியாக்ஷன் கொடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் அதற்கான காரணம் என்ன என்ற தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனராக லால் சலாம் படத்தின் வேலை செய்து வரும் ஐஸ்வர்யா, சில டிப்ஸ்களை செல்வராகவனிடம் தான் கேட்டு வருகிறாராம். செல்வராகவனும் இயக்கம் சம்மந்தமான விசயங்களை கற்றுக்கொடுத்தும் வருகிறாராம்.
