விவாகரத்துக்கு பின் ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு இதுதான் தேவையாம்! அவரே வெளியிட்ட புகைப்படம்

Dhanush Rajinikanth Aishwarya Rajinikanth
By Edward Jul 20, 2022 06:05 AM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக நடிகர் தனுஷை 2004ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அதன்பின் தன் கணவரை வைத்தே 3 என்ற படத்தினை ஸ்ருதி ஹாசனுடன் ஜோடிப்போட்டு தனுஷை இயக்கினார்.

படமும் சூப்பர் ஹிட் பெற்றதோடு தனுஷ் மார்க்கெட்டை எகிரவைத்தது. அதன்பின் வை ராஜா வை படத்தினை இயக்கியும் சில படங்களை தயாரித்தும் வந்தார். 18 வருட திருமண வாழ்க்கையில் யாத்ரா, லிங்கா என்ற இரு ஆண் பிள்ளைகள் இருக்கும் நிலையில் தனுஷுக்கும் ஐஸ்வர்யாவுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிவதாக அறிவித்தனர்.

அதன்பின் ஐஸ்வர்யா இயக்கத்தில் ஈடுபாடு கொண்டும் உடற்பயிற்சி, சைக்கிளிங், யோகா என்று நாட்களை கடந்து சென்று வருகிறார். கிடைக்கும் நேரத்தில் இயக்கத்திலும் பணியாற்றி வருகிறார்.

தற்போது சில சமயங்களில் இவர்களின் அணைப்பு முக்கியமானதாகவும் தேவையாகவும் இருக்கிறது என்று தனுஷுடன் அமெரிக்கா சென்று திரும்பி மகன்கள் யாத்ரா, லிங்காவை கட்டியணைத்த புகைப்படத்தை வெளியிட்டு நெகிழ்ச்சியடைந்துள்ளார்.

இதற்கு சிலர், விவாகரத்தால் இருவரும் ரொம்ப கஷ்டப்படுகிறார்கள் அதை கவனியுங்கள் என்று கூறி வருகிறார்கள்.