ரஜினிகாந்த் மகளுடன் ஒர்கவுட் செய்யும் நயன்தாராவின் முன்னாள் காதலன்.. வெளியான வீடியோ
கடின உழைப்பால் பிரபல நடிகராக உயர்ந்திருப்பவர் தனுஷ். இவர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாயை திருமணம் செய்து கொண்டார்.
பல ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். தற்போது ஐஸ்வர்யா, திரைப்படங்களில் மொத்த கவனத்தையும் செலுத்தி வருகிறார்.
இவர் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக தகவல் ஒன்று வெளியானது.
வெளியான வீடியோ
சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா, ஜிம்மில் ஒர்கவுட் செய்யும் விடியோவை அவரின் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் இவர், நடன இயக்குனர் மற்றும் நடிகரான பிரபு தேவாவுடன் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நயன்தாரா விக்னேஷ் சிவனை திருமணம் செய்வதற்கு முன்பு பிரபு தேவாவை காதலித்ததாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.