அவரே வேண்டாம் பேரு மட்டும் எதுக்கு! தனுஷ் விஷயத்தில் ஷாக் கொடுத்த ரஜினி மகள்

dhanush rajinikanth aishwaryaarajinikanth payani
By Edward Mar 22, 2022 03:15 PM GMT
Report

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்த் தன் இரு மகள்களையும் நல்ல ஒரு இடத்தில் திருமணம் செய்து கொடுத்தார். இரண்டாம் மகள் செளந்தர்யா முதல் திருமணம் விவாகரத்தில் முடிய அதன்பின் இரண்டாம் திருமணத்தையும் நடத்தி வைத்தார்.

மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை காதலித்து தந்தை முன்னிலையில் திருமணம் செய்தார். திருமணமாகி 18 வருடங்களாகியப்பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட பிரிவதாக அறிவித்தனர்.

ஜனவரி 17ல் அறிக்கை மூலம் வெளியிட்ட இருவரிடமும் ரஜினி, கஸ்தூரி ராஜா உள்பட பலர் அறிவுரைகள் கூறி சேர்த்து வைக்க முயற்சி செய்துள்ளனர். இதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாத ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் படங்களின் வேலைகளை பார்த்து வந்தனர்.

தனுஷின் மாறன் படத்தினை லைக் செய்த ஐஸ்வர்யா, அவரின் பயணி மியூசில் ஆல்பத்திற்கு தனுஷும் வாழ்த்துக்கள் தோழி என்று பாராட்டியுள்ளார். அதற்கு டிவிட்டர் பக்கத்தில் நன்றியும் தெரிவித்த ஐஸ்வர்யா, கணவரே வேண்டாம் பெயர் மட்டும் எதுக்கு என்று கூறுவதுபோல் ஒரு முடிவினை எடுத்துள்ளார்.

ஐஸ்வர்யா என்ற பெயருக்கு அடுத்திருந்த தனுஷ் பெயரை எடுத்துவிட்டு ரஜினிகாந்த் என்ற பெயரை மாற்றியுள்ளார். இதிலிருந்து விவாகரத்து விஷயத்தினை இருவரும் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.