பிரபுவை தீவிரமாக காதலித்த பிரபல நடிகையின் மகள் ஐஸ்வர்யா!! மனைவி கொடுத்த ரியாக்ஷன் இதான்..
தென்னிந்திய சினிமாவில் 60களில் இருந்து ஆரம்பித்து 90கள் வரை கொடிக்கட்டி பறந்த நடிகை நடிகை லட்சுமி. ஸ்ரீ வள்ளி என்ற படத்தில் ஆரம்பித்த சினிமா வாழ்க்கையில் தற்போது குணச்சித்திர ரோலில் நடித்து அனைவரையும் கவர்ந்து வருகிறார். பாஸ்கரனை என்பவருடன் 6 ஆண்டுகள் வாழ்ந்து கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார்.
பின் மோகன் சர்மாவை திருமணம் செய்து 5 ஆண்டுகளுக்கு பின் பிரிந்தார். இதனை அடுத்து 7 ஆண்டுகள் கழித்து சிவசந்திரன் என்பவருடன் லட்சுமி வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் முதல் கணவர் பாஸ்கரனுக்கு பிறந்தவர் தான் லட்சுமியின் மகள் நடிகை ஐஸ்வர்யா பாஸ்கர்.
சினிமாவில் மகளையும் அறிமுகம் செய்து வைத்த லட்சுமி, தற்போது குணச்சித்திர ரோலில் நடித்து வருகிறார். பல முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா சமீபத்தில் பேட்டியொன்றில் சில சம்பவங்களை பகிர்ந்திருக்கிறார்.
சிவாஜி சாரின் தேவர் மகன் படத்தில் நடிக்க முடியவில்லை என்றதால் தான் சுயவரம் படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்க ஒத்துக்கொண்டேன். ஏனென்றால் நான் பிரபுவின் மிகப்பெரிய ரசிகை.
16 வயசில் இருந்து நான் காதலிக்கும் மனிதர் புரபு தான், அன்றும் இன்றும் என்றும், சாகுற வரைக்கும். 16 வயதில், பிரபு சாரின் பாலைவன ரோஜாக்கள் என்ற படத்தினை பார்த்தேன். அதில் இருந்து நான் லவ் பண்ண ஆரம்பித்தேன். இது பிரபு மனைவி புனிதா அக்காவுக்கே தெரியும். பலரிடம் அக்காவே சொல்லி இருக்கிறார்.