என்ன ரஜினி அங்கிளா? நடிகை ஐஸ்வர்யாவை தூக்கி ஓடிய சூப்பர் ஸ்டார்..

lakshmi superstar rajinikanth Aishwarya Bhaskaran santhi Yajaman
By Edward Jan 11, 2022 07:20 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ஐஸ்வர்யா பாஸ்கர். நடிகை லட்சுமியின் மகளாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார். தற்போது சீரியல் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை ஐஸ்வர்யா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றிய சில அனுபவங்களை கூறியுள்ளார். எஜமான் படத்தின் போது ரஜினி அங்கிளை சவுக்கில் அடிப்பது போன்ற காட்சி.

அப்போது என் கை நடுங்கியதை பார்த்து , பரவாயில்லை சாந்தி நிறைய காசு வாங்கி இருக்கேன் அடி என்று கூறினார் ரஜினிகாந்த். மேலும், உறக்க கத்துது கோழிபடத்தின் போது மார்கழி மாசத்தில் தண்ணீர் ஊற்றி ஆடினேன்.

அப்போது எனக்கு ஜன்னி வந்து படுத்தபோது ரஜினிகாந்த் பொள்ளாச்சி மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார் என்று கூறிய வீடியோ வைரலாகி வருகிறது.

அம்மா மகள் இருவரும் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஜோடிபோட்டு நடித்தது குறிப்பிடத்தக்கது.