மகளின் செய்கையால் ஷாக் ஆன ஐஸ்வர்யா ராய்.. வைரலாகும் வீடியோ
ஐஸ்வர்யா ராய்
உலகளவில் பிரபலமான இந்திய நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராய். உலக அழகி பட்டம் வென்ற இவர் தமிழில் வெளிவந்த இருவர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார், நடித்த முதல் படத்திலே ரசிகர்களின் கனவு கன்னியாக மனதில் இடம்பிடித்தார்.
பாலிவுட் சினிமாவில் தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர் தமிழில் ராவணன், எந்திரன், ஜீன்ஸ், பொன்னியின் செல்வன் என சில திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்துள்ளார்.
சமீபகாலாமாக ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது கணவருக்கும் இடையே பிரச்சனை உள்ளது, இருவரும் விவாகரத்து பெறப்போகிறார்கள் என பல விதமான வதந்திகள் உலா வந்தது.
மகளின் செயல்
ஆனால், இது பொய்யான தகவல்கள் என இருவரும் முற்றுப்புள்ளி வைத்து விட்டனர். இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தை வெளிநாட்டில் முடித்துவிட்டு, ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் தம்பதியர் அவர்களது மகள் ஆராத்யாவுடன் மும்பை விமான நிலையத்தில் வந்து இறங்கியுள்ளனர்.
அப்போது, மகள் ஆராத்யா மிகவும் மகிழ்ச்சியாக துள்ளிக்குதித்து வலம் வந்தார். மகளின் இந்த செயலைக் கண்டு ஐஸ்வர்யா ராய் மகளை செல்லமாக கண்டித்தார். தற்போது, இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,
Back to Mumbai from New Year Holidays#AishwaryaRai #AishwaryaRaiBachchan #AaradhyaBachchan #MothersLove #AbhishekBachchan #Mumbai #Airport pic.twitter.com/ZHNcUEa5eo
— Aishwarya Rai Fan (@Ram_TamilNadu_) January 4, 2025