அஜித்துக்காக பாலிவுட் நடிகைகளை வளைத்து போட பிளான்!! குந்தவை நந்தினிக்கு வலைவீசிய இயக்குனர்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித் குமார் துணிவு படத்திற்கு பின் தற்போது பைக் ரைடில் கவனம் செலுத்தி வருகிறார்.
இதற்கிடையில் அடுத்த படமான 62 படத்தினை மகிழ்திருமேனி இயக்கவுள்ள நிலையில் படத்தின் டைட்டில் விடாமுயற்சி என்று லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிக்கும் நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறதாம். இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ள அஜித்திற்காக இரு நடிகைகளை தேர்வு செய்யும் வேலையில் மகிழ்திருமேனி இருந்து வருகிறாராம்.
அந்தவகையில், பொன்னியின் செல்வன் படத்தின் இரு கதாநாயகிகளிடமும் இப்படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.
அந்த லிஸ்ட்டில் நடிகை ஐஸ்வர்யா ராய், திரிஷா, கேத்ரினா கைஃப், கங்கனா ரணாவத், கரீனா கபூர் போன்ற 5 பேரிடம் விடாமுயற்சி படத்திற்காக மகிழ்திருமேனி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது.
