இன்னொரு வாய்ப்பு கொடுத்த ஐஸ்வர்யா! கொஞ்சம் யோசிக்க டைம் கேட்ட தனுஷ்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து சூப்பர் ஸ்டாரின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்து மருமகனாக வளர்ந்து வந்தார். அப்படி 18 வருடங்களாக தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து இரு மகன்களுடன் பெற்றனர். இருவரும் வளர்ந்து பெரிய பிள்ளைகளாகும் நிலையில் இருவரும் பிரிவதாக அறிவிப்பை வெளியிட்டனர்.
இதனால் சினிமா வட்டாரத்தில் பெரிய பரப்பரப்பை ஏற்படுத்தியதோடு ரஜினி குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதுகுறித்து ரஜினி, லதா உட்பட பலர் அறிவுரைகளை கூறி ஐஸ்வர்யாவை சமாதானப்படுத்தினர்.
ஆனால் விடாபிடியாக இருந்த தனுஷுக்கு செக் வைக்க பேரனை அனுப்பி இருக்கிறார் ரஜினிகாந்த். அதன்பலனாக தனுஷுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்த ஐஸ்வர்யாவுக்கு இது சாதகமாக அமைந்துள்ளது. ஒருவரையொருவர் சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்க தனுஷ் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஆனால் இதையெல்லாம் படங்களின் படப்பிடிப்பு முடிந்தால் மட்டுமே என்று கண்டிஷன் போட்டுள்ளாராம். எது நடந்தாலும் சீக்கிரம் செய்யுங்கள் என்று ரஜினி கூறியுள்ளாராம்.