உனக்கு எவ்வளவு தைரியம்..தளபதின்னு சொன்ன விசில் வருமா!! சனம் செட்டியை வெளுத்த நடிகை..
சனம் செட்டி
நீட் வினாத்தாள் கசிவு, தேர்வு முறைக்கேடு விவகாரத்தில் சிஜேபியை சேர்ந்த மாணவர்கள் சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதியை சொன்னப்பின் போராட்டத்தை மாணவர்கள் கைவிட்டனர்.
தமிழகத்திலும் பாலன் இல்லத்தில் மாணவர்கள் போராடியபோது நடிகை சனம் செட்டி பேசினார். அப்போது ஏற்பட்ட பரபரப்பு இன்னும் அடங்காத நிலையில் நடிகை காஜல் பசுபதி விமர்சித்துள்ளார்.

காஜல் பசுபதி
காஜல் பேசுகையில், உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் வெளியே மாணவர்கள் சாப்பிடாமல் போராட்டம் பண்ணிட்டு இருக்கும்போது நான் தளபதி படம் பார்த்துவிட்டு வந்தேன் என்று சொல்லுவ, படம் பாக்குறது உன் விருப்பம், ஆனால் அந்த மேடையில் அதை சொல்ல வேண்டிய அவசியம் என்ன.
தளபதின்னு சொன்னா விசில் அடிப்பாங்கன்னு நெனச்சாங்க போல. ஆனா இது அந்த காலம் இல்லை என்று கடுமையாக வெளுத்து வாங்கியுள்ளார் காஜல்.