தமன்னாவை உங்களுக்கு பிடிக்கும்னு வைக்க முடியாது!! ரஜினிகாந்துக்கு கண்டீசன் போட்ட நெல்சா..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் ஜெயிலர் 2. பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வரும் அக்டோபர் 15 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இப்படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி நடைபெறாது என்று கூறப்பட்ட நிலையில், ஜெயிலர் 2 சூப்பர் ஷோ என்ற நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில், இயக்குநர் நெல்சன் கேள்விகளுக்கு ரஜினிகாந்த் பதிலளித்தார்.
அப்போது, ஜெயிலர் 2 படத்தில் எஸ் ஜே சூர்யா, ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, சூரஜ் என்று எல்லோரும் சூப்பராக நடித்திருக்கிறார்கள். படத்தில் ஒரேவொரு மிஸ்ஸிங், தமன்னாதான்.
ஒரு பாடலில் தமன்னாவை வைத்துக் கொள்ளலாம் என்று நெல்சனிடம் சொன்னேன், அதற்கு அவர், சார் உங்களுக்கு பிடிக்கும் என்பதற்காக வைத்துக் கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டார்.

எனக்கு பிடிக்கும் என்பதற்காக சொல்லவில்லை, மக்களுக்கு பிடிக்கும் என்பதால்தான் கேட்டேன், ஆனால் படத்தி வித்தியாசமான அம்சங்களை வைத்திருக்கிறார் நெல்சன் என்று ரஜினிகாந்த் மேடையில் பேசியுள்ளார்.