குழந்தை பெத்துக்க விருப்பமில்லை...நடிகை வரலட்சுமி சரத்குமார் ஓபன்..
தென்னிந்திய மொழிப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை வரலட்சுமி சரத்குமார், கடந்த 2024ல் தொழிலதுபரும் கலைக்கூட உரிமையாளருமான நிக்கோலாய் சச்தேவை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்பும் நடிப்பில் கவனத்தை செலுத்தி வரும் வரலட்சுமி, குழந்தை பெற்றுக் கொள்வது குறித்து பேசியுள்ளார்.
குழந்தை பெத்துக்க விருப்பமில்லை
அதில், எனக்கு குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பவில்லை. இது குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை காரணமாக எடுக்கப்பட்ட முடிவல்ல. தன்னுடைய தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் எடுத்த முடிவு. குழந்தையை பெற்றெடுப்பதற்கு முன், அதன் வளர்ப்புக்கான முழுப் பொறுப்பையும் ஏற்கத் தயாராக இருக்கிறோமா என்று ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.

அப்பொறுப்பை ஏற்கத் தயாராக இல்லாதவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருப்பதும் பொறுப்பான முடிவுதான். திருமணமானவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை, இது ஒவ்வொருவரின் தனிப்பட்ட முடிவு. நிக்கோலாய் சச்தேவுக்கு முதல் திருமணத்தின் மூலம் ஒரு மகள் இருக்கிறார்.
அவரைத் தன்னுடைய மகளாகவே நான் பார்க்கிறேன். இரண்டு செல்ல நாய்களையும் தங்களது குழந்தைகளை போல் வளர்த்து வருகிறேன் என்று வரலட்சுமி வெளிப்படையாக பேசியுள்ளார்.