அம்மன் தாயீயுடன் நடித்துள்ள நடிகர் அஜித்.. அதுவும் எந்த கதாபாத்திரத்தில் தெரியுமா

valimai sunaina ajith kumar sunayana amman thayee
By Kathick Mar 09, 2022 11:50 AM GMT
Report

அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் வலிமை. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து பல திரையுலக நட்சத்திரங்கள் பல உருவு முறையில் நடித்திருந்தனர்.

அப்படி, வலிமை படத்தில் அஜித்தின் சகோதரி கதாபாத்திரத்தில் நடிகை Sunayana என்பவர் நடித்திருந்தார். இவர் கடந்த 1995ஆம் ஆண்டு ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளிவந்த அம்மன் படத்தில் அம்மன் தாயீ கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளில் வெளிவந்த இப்படம் அப்போது மாபெரும் வெற்றியடைந்தது. அம்மன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நாம் பார்த்த, நடிகை Sunayana தற்போது வலிமை படத்தில் அஜித்துக்கு சகோதரியாக நடித்திருந்தது, பலரையும் ஆச்சிரியப்பட வைத்துள்ளது.

அம்மன் தாயீயுடன் நடித்துள்ள நடிகர் அஜித்.. அதுவும் எந்த கதாபாத்திரத்தில் தெரியுமா | Ajith Acted With Amman Thayee In Valimai