பல வருடங்களுக்கு பின் 49 வயது நடிகையுடன் இணைந்த அஜித்.. இது செம கூட்டணி
Ajith Kumar
Simran
Good Bad Ugly
By Kathick
அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி வெளிவரவுள்ளது.
இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, சுனில், பிரபு, யோகி பாபு, சைன் டாம் சாக்கோ என பலரும் நடித்துள்ளனர்.
நேற்று இப்படத்தின் டிரைலர் வெளிவந்து Youtube-ல் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த நிலையில், குட் பேட் அக்லி படத்தின் டிரைலரில் யாரும் எதிர்பார்க்காத விதமாக நடிகை சிம்ரன் எண்ட்ரி கொடுத்தார்.
வாலி திரைப்படத்தில் அஜித் - சிம்ரன் கூட்டணி எவ்வளவு பெரிய வெற்றியடைந்தது என்பதை நாம் அறிவோம். இதன்பின் உன்னை கொடு என்னை தருவேன் படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்திற்கு பின் 24 ஆண்டுகள் கழித்து மீண்டும் இவர்கள் இருவரும் குட் பேட் அக்லி படத்தில் இணைந்துள்ளனர்.
