அஜித் பைக் டயர் பஞ்சர் ஆனால், இப்படி செய்வாரா!! பணமிருக்கு இதற்கு மேலும் செய்வார்..
அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர். இவர் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லீ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்-ல் பிரமாண்டமாக செட் அமைத்து நடத்தி வருகின்றனர்.
இதை தொடர்ந்து விடா முயற்சி படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் பங்கேற்க உள்ளார். இந்நிலையில் அஜித் பைக் டூர் குறித்து பிரபல பத்திரிகையாளர் அந்தணன் ஒரு தகவலை கூறியுள்ளார்.
அதாவது அஜித் பைக் டூர் செல்லும் போது அவரின் பைக் பஞ்சர் ஆனால், அப்படியே அந்த பைக்-யை அந்த இடத்திலேயே போட்டுவிட்டு வர சொல்வாராம், வேற யாராவது கூட எடுத்துக்கொள்ளட்டும். நமக்கு இது வேண்டாம் என்று.
இதனால் கூட வந்தவர்கள் சிலர் இத்தனை லட்சம் பைக் இப்படி போட வேண்டாம், நாங்காளாவது இதை எடுத்துக் கொள்கிறோம், உங்கள் கண்ணிலேயே காட்ட மாட்டோம் என சொல்ல அதற்கு அஜித் ஓகே சொன்னதாக அந்தணன் கூறியுள்ளார், காசு இருக்கு இதற்கு மேலையும் அவர் செய்வார் என இந்த தகவலை கேட்டோர் சொல்லி நகர்கின்றனர்.