பப்ளிசிட்டி தேவையே இல்லை என்று ஒதுங்கியிருந்த அஜித்தா இது? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..

Ajith Kumar Thunivu
By Edward Sep 28, 2022 12:48 PM GMT
Report

அல்டிமேட் ஸ்டார் என்று தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் அஜித் குமார். வலிமை படத்திற்கு பிறகு எச் வினோத், போனி கபூர் கூட்டணியில் துணிவு என்ற படத்தில் அஜித் நடித்து வருகிறார்.

பில்லா படத்திற்கு பிறகு ரசிகர் மன்றத்தை கலைத்தும் ஊடகங்கள் பத்திரிக்கை உள்ளிட்ட பலவற்றில் இருந்து ஒதுக்கியும் வந்துள்ளார். அதேபோல் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் அஜித் பைக் ரைட் துப்பாக்க்கி சுடுதல் போன்றவற்றில் ஆர்வம் காட்டி வருகிறார்.

அப்படியிருக்கும் நிலையில் சில மாதங்களாக ரசிகர்களை சந்தித்தும் அவர்களுடன் செல்ஃபி எடுத்தும் வருகிறார். அதேபோல் தான் எங்கு சென்றாலும் அங்கு வீடியோ எடுப்பவர்களுக்கு போஸ் கொடுத்தும் டிரெண்ட்டாகி வருகிறார்.

இந்நிலையில் பில்லா படத்திற்கு பின் கொடுத்த பேட்டிக்கு பிறகு தற்போது விகடன் ஊடகத்திற்கு பேட்டிக்கொடுத்துள்ளார். இதனை அவர்களின் வார இதழில் போடப்படும் முதற்பக்க அட்டை விளம்பரத்தில் தெரிவித்துள்ளார்கள்.

எனக்குள் நான் செய்த பயணம் என்ற டைட்டிலில் அஜித்குமார் தன்னுடைய வீட்டின் ஷோபாவில், தன் நாயுடன் உட்கார்ந்திருக்கும் புகைப்படம் தான் அது.

அஜித் ஆச்சர்ய ஷேரிங் என்பதால் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை பேட்டியில் கூறப்படலாம்.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி என்னது அஜித் பேட்டிக்கொடுத்திருக்காரா என்று ஆச்சரியமாக கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.

Gallery