ஸ்டெண்ட் மாஸ்டரை கண்டபடி திட்டித்தீர்த்த அஜித்! உண்மையை கூறிய இயக்குனர்..

ajith silva stuntmastersilva kaaval Shanmugam Muthusamy
By Edward Apr 08, 2022 12:10 PM GMT
Report

பெரும்பாலும் சினிமாவில் சிறு படங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது குறைந்து கொண்டே சென்று வருகிறது. பெரிய நடிகர் படம் வெளியாகினார், அந்நேரத்தில் வெளியாகும் சிறு படங்கள் முற்றிலுமாக அடிவாங்கும்.

அப்படி பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்களின் வாழ்க்கை பாதிப்பதாக பல போராட்டங்கள் தமிழ் திரையுலகில் நடந்து வருகிறது. இதுகுறித்து இயக்குனர் சண்முகம் முத்துசாமி அவர்கள் ஒரு விழா மேடையில் பேசியுள்ளார்.

சிட்தி என்ற படத்தின் ஆடியோ லான்ச்சின் போது சிறு படங்கள் பெரிய படங்கள் என்ற பஞ்சாயத்து சென்று கொண்டே இருக்கிறது. தற்போது பாரபட்சம் பார்த்து படங்களை வெளியிடுகிறார்கள்.

நான் நடிகர் விமல் அவர்களின் காவல் படத்திற்கு டயலாக் எழுதியிருந்தேன். அப்போது படப்பிடிப்பில் சண்டை காட்சிகள் நடந்தது. திடீரென ஸ்டெண்ட் மாஸ்டர் சில்வாவிற்கு ஒரு போன்கால் வந்தது.

அப்போது பயந்து கொண்டு பேசி முடித்ததும் எங்களிடம் வந்ததும் ஏன் அப்செட்டாக இருக்கிறீர்கள் என்று கேட்டோம். அதற்கு, எங்க இருக்கீங்க என்று அஜித் சார் கேட்டார் விமல் நடிக்கும் காவல் என்ற சிறு படத்தில் பணி செய்கிறேன் என்று கூறியுள்ளார் சில்வா.

அதற்கு அஜித் சார் திட்டித்தீர்த்து, சினிமாவில் சின்ன படம் பெரிய படம் என்பதை மக்கள் தான் கூறவேண்டும் நாம் நிர்ணயிக்கக்கூடாது என்று அட்வைஸ் செய்து முடித்துவிட்டார்.

ஷூட்டிங் முடிந்தது கூப்பிடுங்கள் என்று அஜித் கூறியதாக சில்வா அவர்கள் தெரிவித்துள்ளார். இதை நான் கேட்ட சாட்சியாக இதை கூறுகிறேன் என்று சண்முகம் முத்துசாமி தெரிவித்துள்ளார்.