தனது வீட்டு பணியாளர்களுக்கு இலவசமாக வீடு கட்டிக்கொடுத்த அஜித்...

Ajith Kumar Actors Tamil Actors
By Kathick Nov 04, 2025 02:30 AM GMT
Report

முன்னணி ஹீரோவாக தமிழ் சினிமாவில் வலம் வரும் அஜித், இந்த ஆண்டு குட் பேட் அக்லி என்கிற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது 64வது படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார்.

இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் படப்பிடிப்பு துவங்கும் என தகவல் தெரிவிக்கின்றனர்.

தனது வீட்டு பணியாளர்களுக்கு இலவசமாக வீடு கட்டிக்கொடுத்த அஜித்... | Ajith Built House For His Staffs

திரையுலகில் உள்ள பிரபலங்கள் குறித்து நமக்கு தெரியாத விஷயங்கள் அவ்வப்போது வெளிவரும். அப்படி நடிகர் அஜித் செய்து நல்ல விஷயம் ஒன்று தெரியவந்துள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு கேளம்பாக்கம் கண்டிகை பகுதியில் தனது வீட்டின் சமையல்காரர், டிரைவர், தோட்டக்காரர்கள் என மொத்தம் 12 பேருக்கு தனித்தனியாக 1500 சதுர அடியில் வரிசையாக வீடு கட்டிக்கொடுத்துள்ளார் அஜித். மேலும், இந்த பகுதிக்கு அஜித் அவென்யூ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.