லைக்காவிடம் கெஞ்சிய நயன்தாரா.. விக்னேஷ் சிவனை தூக்கி எறிந்த அஜித்

Ajith Kumar Vignesh Nayanthara
By Kathick Jan 29, 2023 05:34 AM GMT
Report

விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித்தை வைத்து ஏகே 62 படத்தை இயக்குவதாக இருந்தார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தான் தயாரிப்பதாக இருந்தார்கள். 8 மாதமாக கதையை தயார் செய்து வந்த விக்னேஷ் சிவன் அந்த கதையை அஜித்திடம் கூறியுள்ளார்.

ஆனால், அஜித்துக்கு அந்த கதை பிடிக்கவில்லை. அஜித் பிடிக்கவில்லை என்று கூறிய பிறகும், தயாரிப்பு நிறுவனத்திடம் கதையை கூறியுள்ளார் விக்னேஷ் சிவன். அவர்களும் இந்த குப்பை கதையை தயார் செய்யத்தான் 8 மாதம் ஆனதா என்று கேட்டுள்ளனர்.

இதனால் அஜித் மற்றும் லைக்கா நிறுவனம் இருவருமே கடும் கோபத்தில் உள்ளார்களாம். அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பு நயன்தாராவால் தான் விக்னேஷ் சிவனுக்கு கிடைத்தது.

இதனால், இந்த விஷயத்தை கேள்விப்பட்ட நயன்தாரா, உடனடியாக லைக்கா நிறுவனத்திற்கு போன் செய்து பேசியுள்ளார். ஆனால், அவர்கள் நயன்தாராவை மதிக்கவில்லை. இதனால் தான் இப்படத்திலிருந்து விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.