என்ன நெல்சா வடிவேலுவ பார்த்து தான் காப்பியடிச்சு, விஜய்க்கு சொல்லி கொடுத்தீங்களா.. கலாய்த்தெடுக்கும் அஜித் ரசிகர்கள்

vijay troll vadivelu ajith fans beast
By Kathick Apr 09, 2022 10:45 AM GMT
Report

விஜய் நடிப்பில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பீஸ்ட். பூஜா ஹெக்டே, செல்வராகவன், உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்தது.

பல சாதனைகளை புரிந்திருந்தாலும் கூட, பீஸ்ட் ட்ரைலர் கூர்க்கா படம் போலவே இருக்கிறது, வெளிநாட்டு வெப் சீரிஸ் மனி ஹெய்ஸ்ட் போல் இருக்கிறது என்று கூறி தொடர்ந்து அஜித் ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் பீஸ்ட் படத்தின் மூன்றாவது பாடல், பீஸ்ட் மோட் படம் வெளிவந்தது. இதில் விஜய்யின் சில புகைப்படங்களும் வெளியிட்டிருந்தனர். அதில் ஒரு புகைப்படத்தில் விஜய் தனது வாயில் கத்தியை வைத்து மாஸாக நிற்கும் புகைப்படம் வெளிவந்தது.

இதனை பார்த்த அஜித் ரசிகர்கள், வடிவேலு ஒரு படத்தில் தனது வாயில் அறுவாவை வைத்திருக்கும் புகைப்படத்தை விஜய்யுடன் ஒப்பிட்டு, இதுவும் காப்பியா என கலாய்த்தெடுத்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..