போஸ்டரால் ஆர்.ஆர்.ஆர் படத்தை அதிரவைத்த அஜித் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து பல லட்ச ரசிகர்களை தன்னுள் அடக்கி ஈர்த்து வருபவர் நடிகர் அஜித்குமார். வருகிற பொங்கல் அன்று எச் வினோத் இயக்கத்தில் நடித்த வலிமை படம் வெளியாகவுள்ளது.
சமீபத்தில் அப்படத்தில் அஜித் செய்த ஸ்டண்ட் வீடியோ வைரலாகியது. அஜித் படம் ரிலீஸ் என்றாலே போட்டு போடும் ரசிகர்கள் பல செயல்களில் ஈடுபடுவது வழக்கம். வலிமையுடன் தமிழ் படங்கள் எதுவும் வெளியாகாமல் இருக்கிறது.
ஆனால் வலிமைக்கு போட்டியாக இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் நடிகர் ராம் சரண், ஜூனினர் எண்டிஆர், ஆலியாபட், அஜய் தேவ்கன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்கும் ஆர்.ஆர்.ஆர் படம் 2022 ஜனவரி 7ல் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் அஜித் ரசிகர்கள் வலிமை படத்தினை கொண்டாடி பல போஸ்டர்களை ஒட்டி வருகிறார்கள். அப்படி போஸ்டர்களுக்கு பெயர் போன மதுரையில் அஜித் ரசிகர்கள் ஆர் ஆர் ஆர் படத்திற்கு எதிராக போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளார்கள்.
இதற்கு தெலுங்கு ரசிகர்களும் இணையத்தில் தங்கள் பங்கிற்கு கலாய்த்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.