உங்க இயக்குனரை கூட மதிக்க மாட்டீங்களா அஜித், மிகவும் வருத்தப்பட்ட ரசிகர்கள்

Ajith Kumar
By Tony Jun 10, 2022 07:11 AM GMT
Report

அஜித் இன்று தமிழகமே தலையில் தூக்கி கொண்டாடும் நடிகர். என்னை தல என்று அழைக்காதீர்கள் என்று அன்பாக சொன்னாலும், ‘சரி தல’ என்று தான் சொல்லும் அடாவடியான ரசிகர்களை கொண்டவர் தான் அஜித்.

இவர் எந்த ஒரு நல்லது, கெட்டதிற்கும் வெளியில் தலையே காட்டாதவர். ஆனால், அஜித்திற்கு நயன்தாராவுடன் நல்ல நட்பு உள்ளது.

அஜித்தின் அடுத்தப்படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்கவும் உள்ளார், அப்படியிருக்கையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு அஜித்திற்கு தான் முதல் அழைப்பே சென்று இருக்கும்.

ஆனால், திருமணத்திற்கு அஜித் குடும்பமே வந்தாலும், அஜித் மட்டும் மிஸ்ஸிங்.

இதைக்கண்ட ரசிகர்களுக்கு கொஞ்சம் கோபம் தான், உங்களின் அடுத்தப்பட இயக்குனர் திருமணத்திற்கு கூட வரமாட்டிற்களா என்று வருத்தப்பட்டனர்.